நடிகர் சத்யராஜ் நடிக்க ஆரம்பித்த காலம் முதல் இந்த காலம் வரை நடிகர் சத்யராஜுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. மேலும், நடிகர் சத்யராஜ் ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், ஊடக ஆளுமை மற்றும் முன்னாள் அரசியல்வாதி என பன்முக திறமைகளை கொண்டவர் ஆவார். அவர் தமிழ் சினிமாவில் அதிக அளவில் தோன்றினார். இவரது 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வேதம் புதிது, நடிகன், அமைதி படை, பெரியார் மற்றும் ஒன்பது ரூபாய் நோட்டு ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மூலம் வெற்றியை சந்தித்தார் நடிகர் சத்யராஜ் அவர்கள்.
மேலும் நண்பன், ராஜா ராணி, பாகுபலி, பாகுபலி 2 மற்றும் கனா ஆகிய சமீபத்திய திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து பாராட்டுகளையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து நடிகர் சத்யராஜுக்கு 67 வயது ஆகின்றது. இருந்தாலும் இன்று வரை சினிமாத்துறையில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தற்பொழுது நடிகர் பிரபாஸுடன் இணைந்து ராதே ஷியாம் என்ற திரைப்படத்தில் கூட நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் இயக்குனர் ராதாகிருஷ்ணகுமார் என்பவர் இயக்கவுள்ளார். இந்த திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரும் என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சத்தியராஜ் இதைப் பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை வெளியிட்டிருந்தார்.
அந்த வகையில் நான் கடவுள் நம்பிக்கை இ ல்லாதவன் அப்படியிருக்கையில் இந்த திரைப்படத்தில் கைரேகை நிபுணராக நடித்திருப்பது பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அப்படி இருக்கும் வகையில் நான் கதாநாயகனாக நடித்த பொழுது 25 நடிகைகளை கல்யாணம் பண்ணி இருக்கின்றேன் என்று அவர் சொல்லி உள்ளார். மேலும், படத்திற்காக நடிப்பதை குறை சொல் லக்கூ டாது என்று அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது…