இயக்குனர் ஹரி வீட்டில் நிகழ்ந்த து க் க நிகழ்வுக்கு திரையுலகினர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர் ஹரி. இவர் முதலில் சிம்ரன் பிரசாந்தை வைத்து “தமிழ்” என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார். ஆனால் அந்த படம் பெரிய வெற்றியை ருசிக்கவி ல் லை. உடனே விக்ரம், திரிஷாவை வைத்து சாமி படத்தை எடுத்தார். ஆக்சன், எமோஷனல் கலந்த படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த வகையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் கோவில், அருள், தாமிரபரணி, வேல், வேங்கை, ஆறு போன்ற படங்கள் வெற்றி பெற்றன.
சூர்யாவுடன் சிங்கம் பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3 போன்ற படங்கள் வெற்றி பெற்ற நிலையில் கடைசியாக அருண் விஜயை வைத்து யானை படத்தை எடுத்தார் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது. அவர் தற்போது விஷால் நடித்து வரும் ‘விஷால் 34’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்தது தான். இந்நிலையில் இயக்குனர் ஹரியின் தந்தை வி ஆர் கோபால கிருஷ்ணன் என்பவர் வயது மூப்பு காரணமாக சற்று முன் காலமானார்.
அவருக்கு வயது 88. ஹரியின் தந்தை ம றைவு அவரது குடும்பத்தினரை பெரும் சோ க த்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக ஹரியின் தந்தை உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சி கி ச்சை பெற்று வந்ததாகவும் இன்று காலை சி கி ச்சை ப லனின்றி உ யி ரிழ ந் ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
மறைந்த கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு ஹரியுடன் சேர்த்து ஐந்து மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் உள்ள ஹரியின் இல்லத்தில் தற்போது அவரது உடல் வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.