முதல் முறையாக கமலுக்கு ஜோடியாகும் டாப் நடிகை...!! யார் தெரியுமா...!! இந்த ஜோடியை ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்...!!

முதல் முறையாக கமலுக்கு ஜோடியாகும் டாப் நடிகை…!! யார் தெரியுமா…!! இந்த ஜோடியை ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்…!!

Cinema News Image News

உலக நாயகன் கமலஹாசன் நாயகன் படத்திற்கு பின் மீண்டும் மணி ரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் தான்கமல் 234. இப்படத்தை ராஜ் கமல், ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதைத் தவிர இதுவரை இப்படத்தின் வேறு எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளிவரவி ல் லை.

இந்நிலையில், இன்று இப்படத்திற்கான ப்ரோமோ ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது. இந்த விஷயத்தை கமல்ஹாசன் நேற்று பிக் பாஸ் மேடையில் கூறியிருந்தார். அடுத்த மாதம் கமல் ஹாசன் பிறந்தநாள் அன்று அதாவது நவம்பர் 7ஆம் தேதி இந்த ப்ரோமோ டீசர் வீடியோவை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்த அப்டேட்டைத் தொடர்ந்து வேறொரு லேட்டஸ்ட் தகவலும் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கமலுடன் இணைந்து டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நயன்தாராவும் நடிக்கிறாராம். அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது மட்டும் நடந்தால் கமலுடன் நயன்தாரா இணைந்து நடிக்கும் முதல் படமாக கமல் 234 திரைப்படம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *