ரசிகர்களுக்கு இன்ப அ தி ர் ச் சி...!! இணையத்தை தெறிக்க விடும் தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ...!!

ரசிகர்களுக்கு இன்ப அ தி ர் ச் சி…!! இணையத்தை தெறிக்க விடும் தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ…!!

Cinema News videos

லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம் வசூலை வாரி குவித்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதல்முறையாக வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் தளபதி 68 படம் உருவாகிறது. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இப்போது வெளியாகி இணையத்தில் வை ர லாகிக் கொண்டு இருக்கிறது.

அதில் விஜய் டி-ஷர்ட்டில் வந்து கெத்து காட்டி இருக்கிறார். அதோடு மட்டும ல் லா மல் தளபதி 68-ல் நடிக்கும் பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், மலையாள நடிகர் ஜெயராம், விடிவி கணேஷ், யோகி பாபு, மேலும் வெங்கட் பிரபு குழுவில் உள்ள பிரேம்ஜி, வைபவ், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் என மொத்தக் கூட்டமும் இந்த விழாவிற்கு வருகை தந்திருந்தனர்.

அதே போல் தளபதி 68 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி பூஜையில் கலந்து கொண்டார். மேலும் ஒரு கால கட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளான சினேகா மற்றும் லைலா ஆகிய இருவரும் தளபதி 68 படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் வகையில் இவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

சமீப காலமாக விஜய்யின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில் தற்போது தளபதி 68 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். ஏனென்றால் எப்போதுமே வெங்கட் பிரபு படம் என்றால் அதில் யுவன் சங்கர் ராஜா இசை தான் என்பது இந்த உலகம் அறிந்த ஒன்று. தளபதி 68′ படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. நடிகர் எஸ்.ஜே.சூர்யா நண்பன், மெர்சல் மற்றும் வாரிசு போன்ற விஜய்யின் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவரின் வி ல் லன் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தளபதி 68-யில் பாடல்கள் தெ றிக்க விடும் என்பதில் எந்த சந்தேகமும் இ ல்  லை. மேலும் இந்த பூஜை வீடியோவை தளபதி 68 படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ இப்போது எக்ஸ் தளம் போன்ற இணையங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *