அடேங்கப்பா!! நயன்தாரா நடிக்கும் 75வது படத்திற்கு இவ்வளவு அழகான தலைப்பா...!! வீடியோவை வெளியிட்ட படக்குழு...!!

அடேங்கப்பா!! நயன்தாரா நடிக்கும் 75வது படத்திற்கு இவ்வளவு அழகான தலைப்பா…!! வீடியோவை வெளியிட்ட படக்குழு…!!

Cinema News videos

நடிகை நயன்தாரா திரைப்படங்கள் ஒரு பக்கம், பிஸ்னஸ் ஒரு பக்கம் என கலக்கி வருகிறார். சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தில் நடித்து பாலிவுட்டில் ரசிகர்களை சம்பாதித்து விட்டார்.  நயன்தாரா தற்போது இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். நயன்தாரா 75 எனும் தற்காலிக பெயரில் உருவான இந்த படத்தின் தலைப்பு மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.

அதன்படி நயன்தாராவின் 75-வது படத்திற்கு அன்னபூரணி என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார்.

ராஜா ராணிக்குப் பிறகு நயன்தாரா, சத்யராஜ் மற்றும் ஜெய் கூட்டணி மீண்டும் ஜோடி சேருகிறது என்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இந்த படத்தின் ப்ரமோ  வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.நயன்தாரா தற்போது மண்ணாங்கட்டி என்ற படத்திலும் நடித்து வருகிறார். அடுத்தடுத்து படங்களில் கமீட் ஆகி பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *