ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் நடிகர் ரஜினிகாந்தின் 170வது திரைப்படத்தை இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், ரஜினிகாந்த் உடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது தலைவர் 170 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். 33 வருடங்களுக்கு முன்னர் பாலிவுட் படத்தில் இருவரும் இணைந்து நடித்த நிலையில் தற்போது இணைந்து நடிப்பது குறித்து ரஜினி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். “எனது மனம் முழுக்க சந்தோஷத்தால் நிரம்பி வழிகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ரசிகர்களுக்கும் இந்த படத்தின் மீதான எ திர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.