இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் லியோ. முன்னணி நட்சத்திரங்கள் நடித்து தற்போது வரை 510 கோடிக்கும் மேல் வசூலித்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் பல காட்சிகள் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. அப்படி இதுவரை எந்த நடிகைக்கும் லிப் லாக் கொடுக்காமல் இருந்த நடிகர் விஜய், நடிகை த்ரிஷாவுக்கு அழுத்தமான ஒரு லிப்லாக் கொடுத்து நடித்திருக்கிறார்.
ஆனால் அந்த காட்சியில் எமோஷ்னலான உணர்ச்சி என்ற ஒரே காரணத்தால் தான் விஜய்யும் திரிஷாவும் அதற்கு நடிக்க ஓகே சொன்னதாகவும் லோகேஷ் தெரிவித்திருந்தார். திரிஷாவும் தன் அன்பின் வெளிப்பாடாகத் தான் அந்த முத்தத்தை கொடுத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், திரிஷாவுக்கு முத்தம் கொடுக்கவே பிரபல நடிகர் ஒருவர் மறுத்திருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 96 படத்தில் நடிகை த்ரிஷாவுக்கு முத்தம் கொடுக்க ம று த்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. கிளைமாக்ஸ் காட்சியில் திரிஷாவை விட்டு பிரியும் நிலையில் இயக்குனர் பிரேம் குமார் முத்தம் கொடுக்குமாறு விஜய் சேதுபதியிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு விஜய் சேதுபதி நோ என்றால் நோ தான் என்று உறுதியாக கூறி விட்டாராம். அதே போல் விஜய் சேதுபதி சக நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளிலும் நடிப்பதை தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.