சமூக வலைதளங்களில் பிரபலம் ஒருவர் தனது சிறுவயது பு கைப்படத்தை வெளியிட்டு விட்டால் உடனே அது வை ர லாகி விடுகிறது. அப்படி தமிழ் சினிமாவில் உலா வரும் ஒரு பிரபலம் சிறு வயதில் தனது அம்மா உணவு ஊட்டும் போது எடுக்கப்பட்ட பு கைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பு கைப்படத்தில் சிறுமியாக இருக்கும் பிரபலத்தின் அம்மாவும் பிரபலம் தான். ஆனால் நாயகிகள் கிடையாது. அவர்கள் இருவருமே பாடகர்கள் தான். இப்படி கூறியதுமே உங்களுக்கு சில முகங்கள் நியாபகம் வந்திருக்கும். தமிழ் சினிமாவில் 1995ம் ஆண்டு வெளியான இந்திரா படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் ஸ்வேதா மோகன்.
இவர் தமிழைத் தாண்டி மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். பின்னணி பாடகி சுஜாதா மோகனின் மகளான இவர் இதுவரை 700க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், எம்.எம்.கீரவாணி, ஜி.வி.பிரகாஷ், அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் பாடியுள்ளார்.