உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இவருடைய மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக நடிகர்களை விட நடிகைகளுக்கு கு றைவான சம்பளம் தருவது வழக்கம். அப்படி நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக ஐஸ்வர்யா ராய் விளங்குகிறார். தமிழ் சினிமாவின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு பாலிவுட் தான் மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை தேடித் தந்தது.
அப்படி பாலிவுட்டின் மூலம் தனது அடையாளத்தை பெற்ற ஐஸ்வர்யா ராய் தற்பொழுது வரையிலும் தொடர்ந்து சினிமாவில் நடித்து முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். ஐஸ்வர்யா ராய் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் திரைப்படத்தில் நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று தந்தது. இந்த படத்திற்கு பிறகு ஹிந்திக்கு சென்ற இவருக்கு தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக சூப்பர் ஹிட் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
அப்படி தனது சிறந்த நடிப்பின் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா ராய் தனக்கான அந்தஸ்தை உயர்த்தினார். தமிழில் ஐஸ்வர்யா ராய் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக அவர் நடித்து வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.
கடந்த 2007ஆம் ஆண்டு பாலிவுட் முன்னணி நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த சூழலில் நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள் திரை பிரபலங்களின் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
50 வயதிலும் மார்க்கெட் கு றையாமல் இருந்து வரும் ஐஸ்வர்யா ராய்யின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.775 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் ஐஸ்வர்யா ராய் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் மும்பை பங்களாவின் மதிப்பு மட்டுமே ரூ.112 கோடியாம். அதோடு மட்டும ல் லாமல் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ.10 கோடியும், விளம்பர படங்களில் நடிப்பதற்காக ரூ. 5 கோடி முதல் 6 கோடியும் சம்பளமாக வாங்கி வருகிறாராம் ஐஸ்வர்யா ராய்.