திடீரென ஷிவாங்கி காதில் கேட்கும் ஆண்டவரின் குரல் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வை ர லாகி வருகின்றது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சூப்பர் சிங்கர்” என்ற நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு அறிமுகமாகியவர் தான் ஷிவாங்கி. இவர் மெல்லிசைப் பாடல்களை தன்னுடைய காந்தக் குரலால் பாடி ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார்.
இவர் இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல “குக் வித் கோ மா ளி” என்ற நிகழ்ச்சியிலும் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்த ஷோவில் முதலில் கோ மாளியாக அறிமுகமாகி தற்போது குக்காக 4வது சீசனை சிறப்பித்து இருந்தார். சிவாங்கியை பொருத்த மட்டில் நகைச்சுவை என்பது கை வந்த கலையாக பார்க்கப்படுகிறது.
ஷிவாங்கி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான, “டான்” திரைப்படத்திலும் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருப்பார். இந்த நிலையில், பாடல், நிகழ்வுகள் என பிஸியாக இருந்தாலும் சிவாங்கி அவரின் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை பிக்பாஸ் கன்ஃபஷன் அறைக்குள் அழைப்பது போல் ஒரு வீடியோ காட்சியை பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், இவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லப் போகிறார் என ஆசையாக இருந்த போது வித்யாசாகர் மகனுடன் இணைந்து ஆல்பம் பாடலொன்றை வெளியிட்டுள்ளார். இதில் பார்க்கும் போது இருவரும் நெருக்கமாக நடனம் ஆடுகிறார். இவர்களின் பாடல்களை துவங்குவதற்கு ஒரு ப்ரோமோ பிக்பாஸை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெளிவாக புரிகின்றது.
View this post on Instagram