மலையாள திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் கலாபவன் ஹனீப். ஆரம்ப காலங்களில் மிமிக்ரி செய்து மக்கள் மத்தியில் பிரபலமான இவர், அதன் பின்னர் ம றை ந்த நடிகர் கலாபவனின் கலைக் குழுவில் பயணித்து வந்தார். அதன் பிறகே இவரும் தனது பெயருக்கு முன்னால் ‘கலாபவன்’ என்பதை சேர்த்துக் கொண்டார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மட்டஞ்சேரியைச் சேர்ந்தவர் கலாபவன் ஹனீப். இவரது தந்தை ஹம்சா, தாய் சுபைதா, மனைவி வாஹிதா ஆகியோருடன் ஷாரூக் ஹனீப், ஸித்தாரா ஹனீப் என இரண்டு குழந்தைகளும் இவருக்கு உள்ளனர். 1991ம் ஆண்டு வெளியான ‘செப் கிலுக்கண சங்ஙாதி’ என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் தனது தனித்துவமான காமெடியால் முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கினார்.
மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் என மலையாள டாப் ஹீரோக்களுடன் நடித்த கலாபவன் ஹனீப், காமெடியில் பின்னி பெடலெடுத்து விடுவார். தமிழ் ரசிகர்களின் மீம்ஸ் மெட்டீரியலாக வடிவேலு இருப்பது போல, மலையாளத்தில் கலாபவன் ஹனீப் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நுரையீரல் சம்பந்தமான பி ர ச் சனை காரணமாக சி கிச்சைப் பெற்று வந்தார் ஹனீப்.
எர்ணா குளத்தில் உள்ள தனியார் ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சி கி ச்சை ப லனி ன்றி உ யிரி ழ ந்தார். கலாபவன் ஹனீப் மறைவு செய்தியை அறிந்த மம்முட்டி, மோகன்லால், திலீப் உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு இ ர ங்கல் தெரிவித்துள்ளனர். புழு, 2018, கருடன் ஆகியவை கலாபவன் ஹனீப் நடிப்பில் கடைசியாக சூப்பர் ஹிட்டான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.