அடுத்த சின்னத்திரை ஜோடி ரெடி…!! சுந்தரி சீரியல் நடிகருக்கு பிரபல நடிகையுடன் திருமணம்…! பு கைப்படத்துடன் இதோ…!!

General News videos

சன் டிவியில் ஒளிபரப்பாகி நல்ல ஹிட் ஆன சீரியல் சுந்தரி. அதில் ஹீரோவின் நண்பன் ரோலில் நடித்து பாப்புலர் ஆனவர் அரவிஷ். முதல் பாகம் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் அரவிஷ் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அரவிஷ் தற்போது ஹரிகா என்ற நடிகையை காதலித்து வருகிறார்.

ஹரிகா `திருமகள்’ தொடரின் மூலம் தமிழ் சீரியல் உலகில் என்ட்ரியானார். தெலுங்கு தொடர்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் தமிழ் சீரியல் பக்கம் கவனம் செலுத்தினார். இந்தத் தொடர் இவருக்கென ஓர் அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. ஹரிகா ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்தவர். அரவிஷ் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் அவர்களது திருமணம் குறித்த அறிவிப்பை தற்போது அறிவித்திருக்கின்றனர். ஹரிகாவும், அரவிஷூம் அவர்களுடைய சமூகவலைதள பக்கங்களில் சேர்ந்து ரீல்ஸ்கள் பதிவிட்டு வந்தனர். மேலும், அவர்கள் காதலிப்பதையும் வெளிப்படையாக அவர்களுடைய ரசிகர்களுக்கு அறிவித்திருந்தனர்.

இருவரது வீட்டிலும் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ள நிலையில் அவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் வருகிற நவம்பர் 19ஆம் தேதி அவர்கள் நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெற இருக்கிறது. அதை அவர்களே அறிவித்து இருக்கின்றனர். தற்போது அரவிஷ் – ஹரிகா ஜோடிக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aravish Glitzy (@aravish_glitzy)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *