சினிமாவைப் பொறுத்த வரை ஒரு சில நடிகைகள் மட்டுமே தங்களுக்கு 50 வயதை கடந்த பிறகும் முன்னணி நடிகைகளாக கலக்கி வருகின்றனர். ஆனால் ஏராளமான நடிகைகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு வி லகி திருமணம் செய்துக் கொண்டு செட்டில் விடுகிறார்கள். அப்படி 90 கால கட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த நடிகை சுவலட்சுமி குறித்த தகவல் சோசியல் மீடியாவில் தற்போது வை ர லாகி வருகிறது.
சினிமாவிற்கு அறிமுகமான சில கால கட்டங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சுவலட்சுமி 1994ஆம் ஆண்டு வெளியான உத்திரன் என்ற பெங்காலி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழில் அஜித்துடன் இணைந்து நடித்த ஆசை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
ஆசை படத்திற்கு பிறகு கோகுலத்தில் சீதை, கல்கி, காத்திருந்த காதல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த இவர் கடைசியாக நதி கரையிலே என்ற படத்தில் நடித்தார். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் தனது நடிப்பைத் தொடர்ந்தார். அப்படி சன் டிவியில் ஒளிபரப்பான சூலம் என்ற சீரியலில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து மொத்தமாக வி லகிய சுவலட்சுமி கலிபோர்னியா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார்.
இவ்வாறு திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து மொத்தமாக வி லகி தனது சொந்த வாழ்க்கையில் க வனம் செலுத்தி வருகிறார் சுவலட்சுமி. இவர் விஜய், முரளி போன்றவர்களுடன் இணைந்து நடித்த படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது.