தக் லைஃப் படத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் 42 வயதில் நடிகர் கமல் ஹாசனுடன் கூட்டணி சேரும் பிரபல முன்னணி நடிகை..!! அவர் யார் தெரியுமா..?? தெரிந்தால் நீங்களே ஷா க் ஆகிடுவீங்க..!!

தக் லைஃப் படத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் 42 வயதில் நடிகர் கமல் ஹாசனுடன் கூட்டணி சேரும் பிரபல முன்னணி நடிகை..!! அவர் யார் தெரியுமா..?? தெரிந்தால் நீங்களே ஷா க் ஆகிடுவீங்க..!!

Cinema News Image News

நடிகர் கமல்ஹாசன் ஹாசன் 1960 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், அதற்காக அவர் ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் வென்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் நாடகத்தில் முன்னணி நடிகராக அவரது திருப்புமுனை ஏற்பட்டது.

கர சங்கமம், சுவாதி முத்யம், நாயகன், புஷ்பக விமானம், சத்யா, அபூர்வ சகோதரர்கள் , குணா, தேவர் மகன் ஆகிய படங்களில் நடித்ததற்காக அவர் மேலும் மகத்தான பாராட்டுகளைப் பெற்றார். நம்மவர் , மகாநதி, இந்தியன், ஹே ராம், ஆளவந்தான், அன்பே சிவம், விருமாண்டி, வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், இதில் அவர் பத்து வேடங்களில் நடித்தார், விஸ்வரூபம், மற்றும் விக்ரம். அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், அவரது பல படங்களை தயாரித்துள்ளது.

1984 இல் கலைமாமணி விருது, 1990 இல் பத்மஸ்ரீ, 2014 இல் பத்ம பூஷன் மற்றும் 2016 இல் Ordre des Arts et des Lettres ஆகிய விருதுகளைப் பெற்றார். இவர் இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் கமல் முதன் முதலில் நாயகன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனால் மீண்டும் இந்த கூட்டணி எப்போது இணையும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தான் மீண்டும் இந்த கூட்டணி தக் லைஃப் எனும் படத்தில் 35 ஆண்டுகளுக்கு பின் இணைந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் கமலுடன் நடிகை திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என ஏற்கனவே அதிகாரப்பூர்மாகவே அறிவித்துவிட்டனர். இந்நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அபிராமி நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகை அபிராமி ஏற்கனவே விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த ஜோடி தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளனர் என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *