20 வருடங்களுக்கு பின் 42 வயது நடிகையுடன் இணையும் உலக நாயகன்….!! யாருடன் தெரியுமா…? சூப்பர் ஹிட் ஜோடி ஆச்சே…!!

Cinema News Image News

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு மிகவும் பிஸியான நடிகராக மா றி விட்டார் கமல்ஹாசன். KH 233, தக் லைஃப் என தொடர்ந்து முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஹீரோவாக ஒரு பக்கம் கலக்கி வரும் கமல் ஹாசன் ம றுபக்கம் வி ல் லனாகவும், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் கல்கி திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதற்காக இவருக்கு ரூ. 150 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நடிகராக மட்டுமின்றி தனது ராஜ் கமல் நிறுவனத்தின் மூலம் சிம்புவின் 48வது படத்தையும் சிவகார்த்திகேயனின் 21வது படத்தை தயாரித்து வருகிறார். மணி ரத்னம் இயக்கத்தில் கமல் முதன் முதலில் நாயகன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனால் மீண்டும் இந்த கூட்டணி எப்போது இணையும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எ திர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தனர். அவர்களின் எ திர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகத் தான் மீண்டும் இந்த கூட்டணி தக் லைஃப் எனும் படத்தில் 35 ஆண்டுகளுக்கு பின் இணைந்துள்ளது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என ஏற்கனவே அதிகாரப்பூர்மாகவே அறிவித்து விட்டனர். இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அபிராமி நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகை அபிராமி ஏற்கனவே கமல் இயக்கி நடித்த விருமாண்டி படத்தில் நடித்திருந்தார். அதன்பின் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த ஜோடி தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *