சின்னத்திரையில் முக்கிய ஹீரோயினாக இருப்பவர் ஷபானா. அவர் செம்பருத்தி சீரியலில் நடித்து அவரின் நடிப்புத் திறமையால் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தவர். தற்போது அவர் சன் டிவியின் மிஸ்டர் மனைவி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
ஷபானா பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யனைத் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் குடும்ப எ தி ர்ப்பை மீ றி ஷபானா ஆர்யனை திருமணம் செய்து கொண்டார்.
ஆர்யன் மற்றும் ஷபானா இருவருக்கும் திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது ஆர்யன் ஒரு குழந்தையின் புகைப்படத்தோடு ‘விரைவில் குட்டி ஷாப்புவை launch பண்றோம்’ என இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். அதனால் ஷபானா கர்ப்பமாக இருக்கிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.