தமிழ் சினிமாவை தியாகராஜ பாகவதருக்கு அடுத்தபடியாக மற்றோரு தலைமுறையை புதிய உயரத்திற்கு உயர்த்தியது எம்ஜிஆர், சிவாஜி மற்றும் நாகேஷ் உட்பட பல பிரபல நடிகர்கள் தான் அந்த நேரத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்கள். அதே கால கட்டத்தில் நடிகை மனோரமாவும் சினிமாவில் அறிமுகமானார். நடிகை மனோரமாவின் முதல் நடிப்பு நாடக நிகழ்ச்சிகள் தான்.
அதற்கு முன், திரைப்படங்களுக்கு வந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் மேடையில் நடித்து இருந்த நடிகர்கள். அந்த வகையில் திரையுலகில் நுழைந்த மனோரமா, மகத்தான வெற்றியைப் பெற்றார். மனோரமா ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த படங்களில் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் நடிப்பில் அசத்தி விடுவார்.
அவர் அருந்ததி, 23 ஆம் புலிகேசி, தாமிர பரணி மற்றும் சிங்கம் போன்ற படங்களில் தனது வாழ்நாள் இ று தி வரை தொடர்ந்து நடித்தார். இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் போது, எனக்கு சினிமா பார்க்க ஆசையாக இருந்தது. நான் தொடர்ந்து நடிக்க வேண்டும். இறக்கும் வரை தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்திருந்தார். இதே பாணியில் அவருக்கு கடைசி வரை தமிழ் சினிமா வாய்ப்புகளை அளித்து வந்தது.
அவரது விருப்பத்தை தமிழ் சினிமா ஓரளவுக்கு வழங்கியதாக கூறலாம். ஆனால் இது வரைக்குமே ஆச்சி மனோரம்மாவின் ஒவ்வொரு நடிப்பும் மக்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்று உள்ளது என்பது தான் உண்மை. முக்கியமாக மனோரம்மா தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்தது மட்டும் இல்லாமல் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த ஒரே பெருமைக்குரிய நடிகை ஆவார்.