சினிமாத் துறையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். அவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில்அதிகமாக நடித்து வருகிறார். மேலும், தெலுங்கு வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநதி என்ற திரைப்படத்தில் நடிகை சாவித்ரி வேடத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.
மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமார் ஆகியோரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை கீர்த்தி 2000 களின் முற்பகுதியில் குழந்தை நட்சத்திர நடிகையாக நடிக்கத் தொடங்கினார். பேஷன் டிசைனிங் படித்து முடித்த பிறகு மீண்டும் திரைப்படங்களுக்குத் திரும்பினார்.
பிறகு 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலியில் அவர் தனது முதல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு ரிங் மாஸ்டர், இது என்ன மாயம், ரஜினி முருகன், ரெமோ, நேனு சைலாஜா, பைரவா, நேனு லோக்கல், தானா சேர்ந்த கூட்டம், மகாநதி, சண்டகோழி 2, சர்க்கார் மற்றும் சாமி 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும், மகாநதி திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக எந்த ஒரு படமும் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படி ஒரு நிலையில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களுடன் திரைப்படங்களில் ஜோடியாக நடித்து வருகின்றார். அந்த வகையில் உதயநிதி ஜோடியாக மாமன்னன் நடிக்கவுள்ளார். அந்த திரைப்படத்தின் சூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதாக தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இவர் இப்படி சொல்ல என்ன காரணம் என்று பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்…