பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர் எலிமினேஷன் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் குறித்த முக்கியமான முடிவை பிக்பாஸ் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அந்த அறிவிப்பு பார்வையாளர்களால் கே லி கி ண் டல் செய்யப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நிக்ஸன், மணி, தினேஷ், அர்ச்சனா மற்றும் விசித்ரா ஆகிய ஐந்து பேர் நாமினேன் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் நிக்ஸன் அல்லது மணி இவர்களில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த அதிக கன மழையால் மக்கள் இன்னும் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். பல இடங்களில் தண்ணீர் இன்னும் தேங்கி இருக்கிறது. மேலும் மின்சாரம், தொலைத்தொடர்பு, தண்ணீர் என எதுவும் இ ல் லாமல் பலரும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஆனாலும் புயல் வெள்ளத்திலும் பிக் பாஸ் ஷோ தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கிறது.
அதன்படி மிக்ஜாம் புயல் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இ ய லாத காரணத்தால் இந்த வார எலிமினேஷன் ர த்து செய்யப்படுகிறது என பிக் பாஸ் அறிவித்துள்ளார். இதனை அடுத்து புயல் பாதிப்பு சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே ஏற்பட்டுள்ளது. அவர்கள் தான் பெரும்பான்மையினர்களா? என்றும், அவர்கள் மட்டும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறார்களா? என்று பார்வையாளர்கள் கே லி, கி ண் டல் செய்து வருகின்றனர். எது எப்படி இருப்பினும் இந்த வாரம் எலிமினேஷன் இ ல் லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.