பழம்பெரும் இயக்குனர் மற்றும் நடிகர் ம ர ண ம்...!! க ண் ணீரில் குடும்பத்தினர்...!! இ ர ங்கல் தெரிவிக்கும் திரைபிரபலங்கள்...!!

பழம்பெரும் இயக்குனர் மற்றும் நடிகர் ம ர ண ம்…!! க ண் ணீரில் குடும்பத்தினர்…!! இ ர ங்கல் தெரிவிக்கும் திரைபிரபலங்கள்…!!

Death News

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’மௌனராகம்’ திரைப்படத்தில் மிஸ்டர் சந்திரமௌலி என்ற கேரக்டரில் நடித்த பழம்பெரும் நடிகர் ரா. சங்கரன் இன்று கா ல மா னார். அந்த படத்தில் நடிகர் கார்த்திக் இவரை  “மிஸ்டர் சந்திரமௌலி” என்று அழைப்பது அனைவரிடத்திலும் இன்று வரை நீங்காது நினைவிலிருக்கிறது. அவருடைய ம றை வுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இ ர ங் கல் தெரிவித்து வருகின்றனர். கார்த்திக், மோகன், ரேவதி நடித்த ’மௌனராகம்’ திரைப்படத்தில் ரேவதியின் தந்தை கேரக்டரில் நடித்தவர் ரா. சங்கரன்.

பழம்பெரும் நடிகரான இவர் கடந்த 1931 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ் தெலுங்கு உள்பட பல மொழி திரைப்படங்களில் நடித்த இவர் பழம்பெரும் நடிகர் ஜாவர் சீதாராமனின் உறவினர் ஆவார். தமிழில் 1974-ஆம் ஆண்டு ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மேலும் இவர் இயக்கிய ‘வேலும் மயிலும் துணை’, ‘குமரி பெண்ணின் உள்ளத்திலே’ போன்ற படங்கள் பல விருதுகளை வாங்கி குவித்தது.

அதேபோல் கடந்த 1974 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமான அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பாக பாரதிராஜாவின் புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி மணிரத்னம் இயக்கத்தில் உருவான பகல் நிலவு, மௌன ராகம் மற்றும் ஜமீன் கோட்டை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.  பெரும்பாலான திரைப்படங்களில் இவர் அப்பா மற்றும் தாத்தா வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கமல்ஹாசன், சிவக்குமார் இணைந்து நடித்த ’தேன் சிந்துதே வானம்’ உள்பட ஒரு சில படங்களை இவர் இயக்கியும் உள்ளார்.

கடந்த சில வருடங்களாக, வயது மூப்பு காரணமாக திரைப்படங்கள் மற்றும் எந்த திரைப்பட பணியிலும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாமல் ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் இன்று நடிகர் ரா சங்கரன் காலமானார். அவருக்கு வயது 92. ரா சங்கரன் ம றைவை அடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு இ ர ங் கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, எனது ஆசிரியர் இயக்குநர் ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என இயக்குநர் பாரதிராஜா பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *