தற்போது தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக இப்போது உள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். அதற்குக் காரணம் இவர் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் தான். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இவர்கள் இணைவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இ ல் லை.
ஆதிக் த்ரிஷா இல்லேனா நயன்தாரா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பிரபு தேவாவின் பஹீரா போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், கடைசியாக இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது.
நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் – ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இன்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவர்களின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்தும் கூறியுள்ளார் நடிகர் விஷால்.
இதோ திருமண ஜோடியின் போட்டோ,