பாலன் ஆகாஷ், பொதுவாக கே.பி.ஒய் பாலா அல்லது வெட்டுகிளி பாலா என்று அழைக்கப்படுகிறார். இவர் ஒரு நகைச்சுவை நடிகர் ஆவார். ஸ்டார் விஜய்யின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் தோன்றிய பிறகு அவர் புகழ் பெற்றார். ஆரம்பத்தில் அவர் சென்னைக்கு வந்தபோது அமுதவாணனிடமிருந்து ஆதரவைப் பெற்றார் மற்றும் அது இது எது போன்ற விஜய் டிவி நிகழ்ச்சிகளில் வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினார். 2017 ஆம் ஆண்டில், அவர் கலக்க போவது யாரு சீசன் 6 இல் போட்டியிட்டு, நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார்.
அதில் அவர் நடுவில் வெளியேற்றப்பட்டு, அவர் நிகழ்ச்சியில் தொடர வேண்டும் என்று வா தி ட்ட பிரியங்கா தேஷ்பாண்டே. இதனால் அவர் மீண்டும் காப்பாற்றப்பட்டார். அவர் எப்போதாவது சூப்பர் சிங்கர் 7 இல் தொகுப்பாளராக வருவார். கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஜுங்கா படத்தில் அறிமுகமானார். பாலா தொகுத்து வழங்கிய ருத்ரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, ராகவா லாரன்ஸ் பாலாவுக்கு 10 லட்சத்தை தனது நல நிதிக்கு வழங்கியுள்ளார்.
2023ல் ஈரோடு அருகே கடம்பூர் மலைவாழ் மக்களுக்கு பாலா இலவச ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார். முன்னதாக, தனது பிறந்தநாளில், முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார். இவர் இன்னும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவருக்கு இன்னும் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் சென்னையில் வந்த மிக்ஜாம் பு யல் காரணமாக நகரமே வெ ள் ளத்தில் த த் த ளித்தது. அந்த நேரத்தில் அங்கு இருந்த மக்களுக்கு பாலா பல்வேறு உதவிகளை செய்தார்.
தன்னிடம் இருந்த 2 லட்சம் ருபாய் பணத்தை அவர் 200 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்தார். இவர் அப்படி செய்ததை பலரும் பாராட்டினார். இந்நிலையில், தற்போது பாலாவின் விரல்கள் உ டை ந்துள்ளது. அது எப்படி என்ற காரணத்தை இன்னும் அவர் கூறவில்லை. அவரது விரல் உடைந்த புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு கேப்ஷனாக “மனம் நிறைந்தது…. விரல் உ டை ந்தது…. நன்றி” என பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…