தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் தேவதர்ஷினி. இவர் சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தார். அவர் வணிகவியல் கல்லூரி படிப்பை படித்துள்ளார். அதன் பின்னர் அப்ளைடு சைக்காலஜியில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும் போதே இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கத் தொடங்கினார். பின்னர் தூர்தர்ஷன் தொடரான கனவுகள் இலவசத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இது நாகாவின் மர்மதேசம் என்ற மர்மத் தொடரில் அவர் நடிக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.
நாகா இயக்கிய ரமணி vs ரமணி பாகம் 02ல் அறிமுகமானார். அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று அவர் கருதுகிறார். அது அவரை சினிமாத் துறையில் நிலைநிறுத்தியது. பார்த்திபன் கனவு என்ற படத்துக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார். அவர் சக்தி பிறக்குது என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இது ஒரு NGO மூலம் தயாரிக்கப்பட்டது. முனி 2: காஞ்சனா படத்திற்குப் பிறகு, அவர் தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
எந்த ஒரு நடிகையாக இருந்தாலும் தனது வாழ்க்கையில் ஒரு முன்னணி நடிகருடன் நடித்து இருப்பது வழக்கமானது தான். ஆனால் அந்த வகையில் நடிகை தேவதர்ஷனி அஜித் வரை அனைவருடனும் நடித்த நடிகை. முக்கியமாக நடிகர் விஜய் நடித்த பல படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை தேவதர்ஷனி. 1997-ல் எத்திராஜ் கல்லூரியில் பி.காம் படித்துக் கொண்டு இருந்தவர் ஜெ.ஜெ டி.வி, சன் டி.வி-களின் நிகழ்ச்சிகளைத் தொகுக்கத் தொடங்கினார். ஆனால் தற்போது எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காமல் இருந்து வருகிறார்.
ஆனால் ஆரம்ப காலத்தில் பல மக்கள், நீ சினிமாவில் நடிக்க போறியா..? உனக்கெல்லாம் எதற்கு இந்த கனவு…? என்று பல மக்களும் கி ண் ட ல டித் தார்களாம். ஆனால் அதற்கெல்லாம் கொஞ்சம் கூட மதிப்பு கொடுக்காமல் தனது வெற்றியை நோக்கி வந்த நடிகை தற்போது பிரபலநடிகையாகி விட்டார். ஒரு ப்ரேக்குக்குப் பிறகு, 2010-ல் காஞ்சனா திரைப்படத்தில் கோவை சரளாவோடு அவரின் காமெடி வொர்க்-அவுட் ஆனது.
இப்படிப்பட்ட நடிகை தேவதர்ஷனி ஆரம்பத்தில் நமது மனோரமா கூட தான் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தற்போது உள்ள படங்களில் கோவை சரளாவிற்கும், தேவதர்ஷனிக்கும் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி இருந்ததால் இருவரின் நடிப்பும் மக்களுக்கு பிடித்து விட்டது. அண்ணி, அக்கா என்று பல கேரக்டர்களில் நடித்து பிறகு காமெடியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளில் காஞ்சனா திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நகைச்சுவை நடிகை விருது பெறுகிறார்.
பல வாரிசு நடிகைகள் தமிழ் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது நடிகை தேவதர்ஷனி மகள் மட்டும் தான் திரைப்படத்தில் நடிக்காமல் இருக்கிறார். தமிழ் சினிமாவை பொறுத்தவரை வாய்ப்பு கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் மக்களிடையே கிடைக்கும் வரவேற்பு தான். மேலும் தற்போது வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு சென்றுள்ளார் நடிகை தேவதர்ஷனி. தற்போது தனது மகள் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.