தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் 2002-ஆம் ஆண்டு வெளியான ‘ஈஸ்வர்’ என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். அறிமுக படத்தைத் தொடர்ந்து மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது வெற்றிப் படங்கள். பல வெற்றிப் படங்களை கொடுத்த பிரபாஸ், எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானார்.
இப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பட்டையை கிளப்பி சாதனையை நிலை நாட்டியிருந்தது. இதன் காரணாமாக பாலிவுட் நடிகர்களே மி ர ண் டு போயினர். பாகுபலி படத்தின் மூலம் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் தனது அடுத்தடுத்த படங்களுக்கு சம்பளத்தை 100 கோடிகளாக உயர்த்தினார்.
இந்நிலையில் தற்போது நடிகர் பிரபாஸின் திருமணம் குறித்த செய்தி ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது நடிகை அனுஷ்காவும், பிரபாஸும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் திருமணத்துக்கு பிறகு இவர்கள் அமெரிக்காவில் குடியேற இருப்பதாகவும், இதற்காக அங்கு பங்களா வீடு ஒன்று கட்டி உள்ளதாகவும், ஏற்கனவே பல தகவல்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கி சுகி சுக்கள் வந்து கொண்டே இருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.
இதனைத் தொடர்ந்து இருவரும் 40 வயதை கடந்துள்ள நிலையில் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. எனினும் இவர்கள் காதலிப்பதாக வெளியான வதந்தியில் கொஞ்சமாவது உண்மை இருக்கும் என்று ஒரு சிலர் ர க சி யமாக பேசி வந்தனர்.
அந்த வகையில் சமீபத்தில் ம ர ண ம் அடைந்த பிரபாஸின் பெரியப்பாவும், தெலுங்கு நடிகருமான கிருஷ்ணராஜ் ம ருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போது பிரபாஸுடன் நேரில் சென்று அனுஷ்கா அவரை பார்த்த புகைப்படம் வெளியாகி இருந்தது. அத்தோடு கிருஷ்ணராஜ் மரணம் குறித்து வலைதளத்தில் உருக்கமான பதிவினையும் அவர்கள் பகிர்ந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அனுஷ்கா, பிரபாஸ் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கிருஷ்ண ராஜும் விரும்பியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது கிருஷ்ண ராஜின் விரும்பத்தினை நிறைவேற்றும் வகையில் அனுஷ்காவும் பிரபாஸும் திருமணம் செய்ய உள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.