தற்பொழுது இந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் நயன்தாரா, த்ரிஷா, ராஷ்மிகா மந்தனா. இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் மூவரும் ஒரு படத்தில் நடிப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் மூன்று பேரில் யாருக்கு அதிர்ஷ்டம் அ டிக்கும் என்ற கேள்வி தற்போது திரை உலகினர் மத்தியில் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் கர்நாடக சங்கீத மேதை எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை கன்னட திரை உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தை இதுவரை இ ல்லாத வகையில் பிரம்மாண்டமாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
மேலும், இந்த படத்தை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனம் அந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை செய்து வரும் நிலையில் இந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று தேர்வு செய்யும் ஆலோசனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அந்த வகையில் இவர்கள் மூவரின் பெயரும் அ டிபட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்தால் சம்பளத்தைக் கூட குறைத்துக் கொள்வதாகவும் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் மூவரும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது தொடர்பாக தங்களுக்கு நெருக்கமானவர்கள் மூலம் தொடர்பு கொண்டு படத்தில் நடிக்க வாய்ப்பு பெற முயற்சி செய்து வருகிறார்கள் என்று கன்னட ஊடகங்கள் மூலம் கூறப்படுகிறது.
இவர்கள் மூவரும் தென்னிந்திய திரை உலகில் மிகவும் பிரபலம் என்பதால் இந்தியா மட்டுமின்று உலகப்புகழ் பெற்ற பாடகியாக இருந்த எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பயோபிக் திரைப்படத்தில் நடிக்க யாரை தேர்வு செய்வது என்று தற்பொழுது தயாரிப்பு நிறுவனம் கு ழப்பத்தில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்கள். கூடிய விரைவில் இந்த படத்தில் நடிக்கவிருப்பது யார் என்பது குறித்து தெரிய வரும். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை வரும் 2025ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.