தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்துடன் நடிக்க பல நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு ஆ சையோடு காத்திருப்பார்கள். ஆனால் இந்த ஒரு நடிகை மட்டும் இதுவரை அவருடன் நடிக்க வாய்ப்பிருந்தும் கூட நடிக்காமல் போய் விட்டார்.
கமல், அஜித், விஜய், தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த அந்த நடிகை தான் சினேகா. அவர் பிரசன்னாவை திருமணம் செய்த பின் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதை தவிர்த்து வரும் சினேகா 90ஸ் கிட்ஸ்களின் கனவுக் கன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வந்தார்.
அப்படி அவர்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை சினேகா, சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 22 ஆண்டுகளில் ஒரு முறை கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சொல்லப் போனால் அவர் படத்தில் சிறு ரோலில் நடிக்க கமிட்டாகி அதன் பிறகு வி லகி விட்டார் என்ற செய்தி கூட வெ ளியாகவி ல்லை. அப்படி இருக்கையில் 30 வயது மூத்த நடிகரான கமல் ஹாசனுடன் வசூல் ராஜா எம் பி பி எஸ் படத்தில் ரொமான்ஸ் செய்து விட்டார் நடிகை சினேகா.