நாட்டாமை தொடங்கி இன்று வரை 100 கணக்கான படம் எடுப்பவர்களின் பேவரைட் இடமாக இருந்து வரும் கிராமம் ஏன் தெரியுமா ? அட இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா...?

நாட்டாமை தொடங்கி இன்று வரை 100 கணக்கான படம் எடுப்பவர்களின் பேவரைட் இடமாக இருந்து வரும் கிராமம் ஏன் தெரியுமா ? அட இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா…?

Cinema News

தமிழ் சினிமாவில் பல ஊர்களில் ஏன்? வெளிநாட்டில் சென்று கூட படம் எடுக்கிறார்கள். ஆனால் ஒரு சில இடங்கள் அதிகமான படங்களில் இடம்பெறுகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகில் அமைந்துள்ள கிராமம் தான் காளியாபுரம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சி, சண்டைக் காட்சி, பாடல் காட்சி என அனைத்தும் இந்த குறிப்பிட்ட இந்த பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. இப்போதில்லை கிட்டத்தட்ட 1970 களில் இருந்தே இந்த இடத்தில் பல படத்தின் காட்சிகள் எடுக்கப்படுகிறது.

முக்கியமாக இந்த ஊரில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தின் இந்த குறிப்பிட்ட காட்சியை சொன்னாலே போதும். உங்களுக்கு இந்த இடம் உடனே உங்களுக்கு ஞாபகம் வந்து விடும். அப்பேர்ப்பட்ட ஒரு காட்சி தான் அது. அதாவது நாட்டாமை படத்தில் ஒரு விதமான பேக் ரௌண்ட் மியூசிக்குடன் சரத்குமாரும், டீச்சரும் ஒரு வீட்டில் நெருக்கமாக இருப்பார்கள் அல்லவா? அந்த இடம்தான் அது.

கவுண்டமணி நாட்டாமை படத்தில் காதுகேட்காத ஒருவரிடம் “இந்த ஆளு டீச்சர் வச்சிருக்கான் டோய்” என்று கூறும் நகைச்சுவை காட்சி மிகவும் பிரபலமானது. அந்த காட்சி இங்கு தான் எடுக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நினைத்தாலே இனிக்கும் படத்தின் “பன்னாரஸ் பட்டு கட்டி” அந்த படத்தின் பாடல் இங்கு தான் எடுக்கப்பட்டது. இதே இடத்தில் தான் பூமி படத்தில் சரண்யாவும் ஜெயம் ரவி இட்லி கடை போட்டு சாப்பிடும் அந்த காட்சி எடுக்கப்பட்டது.

நகைச்சுவை மன்னர்களான கவுண்டமணி செந்தில் நடிப்பில் வெளிவந்த come on டைகர் இன்று புலியேய வேட்டையாட செல்லும் அந்த காட்சி இங்கு தான் எடுக்கப்பட்டது. அதேபோல் அஜித் படத்தில் ஜன கன மன என்ற அந்த பாடல் காட்சியும் இங்கு எடுக்கப்பட்டது தான். எல்கேஜி படத்தில் இரு வெவ்வேறு கட்சிகள் ஓட்டு கேட்டு வரும் பொழுது சந்தித்துக் கொள்ளுமாறு இருக்கும் அந்த காட்சியும் இதே இடத்தில் எடுக்கப்பட்டது தான்.

சிம்பு நடித்த காளை படத்தின் கடைசியில் வரும் சண்டைக் காட்சிகள் அதுவும் இங்கு தான் படம் பிடிக்கப்பட்டது. இப்படி இந்த இடத்தில் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. எதற்காக பல திரைப்படங்களின் காட்சிகள் இங்கு வந்து எடுக்கப்படுகின்றது என்றால் அதற்கு ஒரே காரணம் தான். அது என்னவென்றால் அந்த இடம் நல்ல சுற்றுப்புற சூழலுடன், இயற்கை அழகுடன், மனிதர்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத இடம் என்ற காரணம் தான். எப்போது இங்கு ஷூட்டிங் எடுத்தாலும் பெரிதளவில் எந்த  தொந்தரவும் இருக்காது. அந்த அளவில் ரசிகர்களின் கூட்டம் சேராது. இது போன்ற காரணங்களினால் தான் குறிப்பாக இந்த கிராமத்தில் அதிக அளவில் படங்கள் எடுக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *