தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நயன்தாரா 7 வருடங்களாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை ஜூன் 9 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு ஸ்பெயின், துபாய் என ஹனிமூனை முடித்து தற்போது இந்தியா பக்கம் திரும்பி இருக்கிறார்கள் இந்த காதல் தம்பதியினர்.
திருமணத்திற்கு முன் போயஸ் கார்ட்னரில் 20 கோடிக்கும் மேல் மதிப்புள்ள 2 பிளாட்டினை வாங்கினார். இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளுக்கு நயன்தாராவுடன் துபாய் கப்பலில் கொண்டாடி பார்ட்டி வைத்திருந்தார். அங்கு எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். 8 வருடமாக இந்த பிறந்த நாளை கொண்டாடி வருகிறேன் என்று நயன் தாரா நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
தற்போது 3 குட்டி சிறுவர்களுடன் நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் புகைப்படம் எடுத்துள்ளனர். அதை விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டா ஸ்டோரியில், வருங்காலத்திற்கான பயிற்சி என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு ஒரு பதிவினை போட்டுள்ளார்.
இதன்மூலம் அடுத்த வருடமே நயன் தாரா குழந்தை பெற்றுக் கொள்வார் என்று சூ சகமாக விக்னேஷ் சிவன் கூறியுள்ளதாக பலர் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.