கொரோனா காலத்திற்குப் பிறகு சீரியல்களை பார்ப்பவர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. தற்போது வெள்ளித்திரையை விட சின்னத்திரைக்கே ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அந்த வகையில் ஒரு சில சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் தான் தேஜஸ்வினி.
இவர் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டில் தொடங்கப்பட்ட சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற மெகா தொடரில் நடித்திருந்தார். இந்த தொடரின் மூலம் வினோத் மற்றும் தேஜஸ்வினி ஆகிய இருவரும் புதுமுகங்களாக மக்களுக்கு அறிமுகமானார்கள். அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட இந்த சீரியல் 2019 முதல் 2021 வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.
நீண்ட நாட்களாக பார்க்கப் பட்டு வந்த இந்த தொடர் முடிவடையவே நாடகத்தின் நாயகி தேஜஸ்வினி உடனே ஜீ தமிழில் வித்யா நம்பர் 1 என்ற புதிய தொடரில் நாயகியாக நடிக்க கமிட்டாகி விட்டார். இந்த நிலையில் தற்போது சீரியல் நடிகை தேஜஸ்வினிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் அந்த பிரபலம் யார் என தெரியவி ல்லை. ஆனால் அவரின் நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ரலா கி வருகின்றது. இதோ அந்த புகைப்படங்கள்…