முதன்முறையாக இரட்டை குழந்தைகளின் அழகான வீடியோவை வெளியிட்ட நமீதா...!! செம்ம கியூட்...!!

முதன்முறையாக இரட்டை குழந்தைகளின் அழகான வீடியோவை வெளியிட்ட நமீதா…!! செம்ம கியூட்…!!

General News videos

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் அவர்கள் குழந்தைகளின் வீடியோவை முதன் முறையாக வெளியிட்டுள்ளார். கடந்த 2004-ல் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை நமீதா. இந்தப் படத்தைத் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்.

மச்சான்ஸ் என ரசிகர்களை செல்லமாக அழைக்கும் நமீதாவுக்கு ரசிகர்கள் கூட்டம் மிகவும் அதிகம். இதனிடையே, கடந்த 2017-ம் ஆண்டு அவருடைய காதலரான வீரேந்திர சவுத்ரியை நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் பேசிய நமீதா, “இந்த நல்ல சந்தர்ப்பத்தில், இந்த ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். உங்கள் ஆசிகளும், அன்பும் அவர்களுக்கு என்றும் இருக்கும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.

இந்நிலையில் இரட்டை குழந்தைகளை கையில் ஏந்தியபடி நமீதா எடுத்த போட்டோஷூட் வீடியோ இணைய தலத்தில் வைரலாகி வருகிறது. அ தில் பாசமிகு தாயாக நமீதாவின் சந்தோஷத்தை பார்க்கவே அவ்வளவு சூப்பராக இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகி்ன்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *