பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி மூலம் மக்களிடையே பிரபலமாகி அதன் பின் சினிமாவுக்குள் ஏராளமானவர்கள் பிரபலமாகி நடித்து வருகின்றார்கள். ஆனால், தொலைக்காட்சியில் பிரபலமானவர்கள் பலர் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே வெள்ளித்திரையில் வெற்றி பெற்று வருகின்றார்கள். ஒரு சிலர் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இன்னும் சின்னத்திரையில் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கலக்கப் போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியும் ஒன்று. அந்த நிகழ்ச்சியின் மூலம் இன்று மக்களிடையே பிரபலமானவர் தான் குரேஷி என்பவர். இவர் காமெடி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போன காரணத்தினால் தன்னிடம் உள்ள மிமிக்ரி செய்யும் திறமையை வைத்து விஜய் டிவி மூலம் இன்று விஜய் டிவியில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்றார்.
அந்த வகையில் கலக்க போவது யாரு சீசன் 5 போ ட் டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். அதனைத் தொடர்ந்து பல காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். மேலும், இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ராஜா ராணி 1 துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான சரவணன் இருக்க பயமேன் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார்.
மேலும், இவர் தற்பொழுது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் இருந்து வருகின்றார். அதனைத் தொடர்ந்து மக்களின் stress buster நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக கலந்து கொண்டு பலரையும் க வ ர்ந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்து கொண்ட சில புகைப்படத்தை முதன் முறையாக இணையத்தில் வெளியிட்டு உள்ளார் இதோ அவர்களின் புகைப்படம்…