விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ஒரு சீரியலான சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பாப்புலர் ஆனவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. அவர்கள் நிஜத்திலேயே காதலித்து திருமணமும் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் 2014ல் நடந்தது. அதன் பிறகு விஜய் டிவியில் மாப்பிள்ளை என்ற சீரியலில் இருவரும் நடித்தனர்.
இந்நிலையில் திருமணமாகி 8 வருடங்களுக்கு பிறகு ஸ்ரீஜா திடீரென கர்ப்பம் ஆகி இருக்கிறார். தற்போது ஸ்ரீஜாவின் வளைகாப்பு விழா நடைபெற்று இருக்கிறது. அதன் போட்டோக்களை செந்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு செம மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர்களுக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.