ஒரு கால கட்டத்தில் சினிமாவில் பிரபலமாக இருந்தவர்கள் ஒரு சில காரணங்களால் அதன்பிறகு நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு விலகி விடுகிறார்கள். அதன் பின்னர் அவர்கள் குடும்ப வாழ்க்கையிலோ அல்லது வேறு தொழில் செய்யவோ சென்று விடுகிறார்கள். அந்த வகையில் தென் இந்திய சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகர் ரியாஸ் கான்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரின் குணச்சித்திர வேடத்தை விட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தற்காகவே இவருக்கு ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இவரின் உடல் அழகுக்கு பெண் ரசிகைகள் அதிகம்.
அதேபோல சினிமாத்துறையில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் உமா. இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் வலம் வந்தவர். விஜய்டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் பகுதியில் இவர் கலந்து கொண்டு சிறப்பாக சமையலை செய்தார் என்றே சொல்ல வேண்டும்.
அந்த வகையில் ரியாஸ்கான் உமாவை காதலித்து வந்த நிலையில் அவரை கடத்தி வந்து தாலி காட்டாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த விஷயத்தை இவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
Copyright vivasayathaikappom.com