ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு முன்னணி நட்சத்திரங்களின் ஏதாவது ஒரு படத்தில் ஒரு புதிய குழந்தை அறிமுகமாகி விடுகிறது. ஒவ்வொரு குழந்தை நட்சத்திரமும் தனது திறமையான நடிப்பால் மக்கள் மனதில் ஆழமாக பதிவாகி விடுகின்றனர்.
அப்படி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து செம ஹிட் கொடுத்த ஒரு படம் தான் ரெமோ. 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்த ஒரு முக்கிய குழந்தை நட்சத்திரம் தான் ரக்ஷ்னா. இந்த குழந்தை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
அதுமட்டுமின்றி இந்த குழந்தை தற்போது விஜய் டிவி ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மெகா ஹிட் சீரியலான பாரதி கண்ணமாவில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்த குழந்தையின் குடும்ப புகைப்படம் இணையத்தில் பரவி செம வைரலாகி வருகிறது.