பொதுவாக சினிமாவை பொறுத்தவரை காமெடி மற்றும் செண்டிமெண்ட் திரைப்படங்களை மக்கள் அதிக அளவில் விரும்பினாலும் வரலாற்று திரைப்படங்கள் என்று வரும் போது மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் ச மீப காலமாக சினிமாவில் வரலாற்று திரைப்படங்கள் அதிகமாக படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
அதோடு இந்த திரைப்படத்தில் பெண்கள் கதாபாத்திரத்தில் பலர் நடித்திருந்தாலும் முக்கியமாக நடித்த இரு நடிகைகளான ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷாவின் கதாபாத்திரங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதே போல் பல நடிகைகள் பல படங்களில் இளவரசி மற்றும் மகாராணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அதில் மக்கள் மனதை க வ ர்ந் தவர்களும் இருக்கின்றனர்.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா திரைப்படத்தில்நடிகை கீர்த்தி சுரேஷ் பிளாஷ் பேக் காட்சியில் ராஜாவின் மனைவியாக நடித்து அசத்தியிருப்பார். அதேபோல் காஷ்மோரா திரைப்படத்தில் நயன்தாரா, ரத்ன மகாதேவி என்ற கதாபாத்திரத்தில் மி ர ட் டலாக நடித்திருப்பார். இப்படி பல நடிகைகள் இளவரசி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த நடிகைக்கு எந்த நடிகையும் ஈடாக முடியாது என்றே சொல்ல வேண்டும்.
அதாவது அந்த நடிகை யார் என்று பார்க்கப் போனால் அவர் வேறு யா ருமில் லை நடிகை அனுஷ்கா தான். இவர் அ ரு ந்ததி திரைப்படத்தில் தன்னுடைய திறமையான நடிப்பால் மக்கள் மனதில் நீ ங் காத இடத்தைப் பிடித்தார். அது மட்டுமில்லாமல் பாகுபலி திரைப்படத்தில் இளவரசி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை க வர்ந் திருப்பார்.
அதற்கு காரணம் நடிகை அனுஷ்காவின் நல்ல உயரமும், அவரின் கம்பீரமான நடிப்பும் இந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது என்றே கூறலாம். இதனால் தான் இன்னமும் அருந்ததி திரைப்படத்தில் பொம்மாயி என்ற கேரக்டரும், பாகுபலி திரைப்படத்தில் தேவசேனா என்ற கேரக்டரும் இன்னமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் இன்னமும் அந்த இரண்டு கதாபாத்திரங்களையும் இன்னமும் நினைவில் கொண்டுள்ளனர்.