தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குனரான விக்னேஷ் சிவனும் 7 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது ரசிகர்களால் கொண்டாடும் நட்சத்திர ஜோடிகளில் ஒரு ஜோடி தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறி இப்போது திருமணமும் செய்து கொண்டார்கள்.
இவர்களின் திருமணம் முதலில் திருப்பதியில் நடப்பதாக இருந்தது. பின் சில தவிர்க்க முடியாத காரணங்களால் மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் நடந்தது. இவர்கள் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இவர்கள் திருமணத்தின் புகைப்படங்கள் அனைவருக்கும் வியப்பூட்டும் வகையில் இருந்தது.
இவர்கள் திருமணம் முடித்த பின் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் சென்று அங்கிருந்து நிறைய புகைப்படங்களை இணைய தளங்களில் வெளியிட்டிருந்தனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ர லாகின. இந்த நிலையில் திடீரென விக்னேஷ் சிவன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் என்ன இது திருமணம் நடந்து நான்கு மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கிறது என யோசித்து வந்தனர். அதன் பிறகு தான் தெரிந்தது அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார்கள் என்பது. இவர்கள் குழந்தைக்காக கடந்த நவம்பர் மாதமே சென்னையில் உள்ள தனியார் ம ருத் துவமனையில் இதற்கான வேலைகளை செய்துள்ளார்களாம். இந்த விஷயத்தை சினிமா பிரபலம் ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.