பிரபல வில்லிசை வேந்தர் வயது முத்துவின் காரணமாக காலமானார்...!! திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி...!!

பிரபல வில்லிசை வேந்தர் வயது முத்துவின் காரணமாக காலமானார்…!! திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி…!!

Death News

பிரபல வில்லிசை பாட்டு கலைஞரான சுப்பு ஆறுமுகம் என்பவர் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 93. இவர் நெல்லையில் சத்திர புதுக்குளத்தில் பிறந்தவர். தனது வில்லுப் பாட்டின்  மூலமாக சுதந்திர போராட்ட காலத்திலேயே மக்களிடையே ஆன்மீகம் மற்றும் தேச பக்தியை வளர்த்தவர்.

அதுமட்டுமில்லாமல் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச புராணங்களை மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தனது வில்லு பாட்டின் மூலம் மக்களிடையே கொண்டு சேர்த்தவர். இவர் தனது 14 வயதிலேயே குமரன் பாட்டு என்ற கவிதை தொகுப்பின் மூலம் பிரபலமானவர். கடந்த 40 வருடங்களாக தனது வில்லுப் பாட்டின் மூலம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கச்சேரியினை நடத்தி வந்தார். இதன் மூலம் இளைய தலைமுறையினரின் மனதைக் கவர்ந்தார்.

முதலில் வில்லுப்பாட்டு என். எஸ். கிருஷ்ணன் அவர்களால் பிரபலம் அடைந்தது. அதன் பிறகு சுப்பு ஆறுமுகம் அவர்களால் உலகம் முழுவதும் பரவியது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் 19 படங்களுக்கும், நகைச்சுவை நடிகர் நாகேஷின் 60 படங்களுக்கும் நகைச்சுவை பகுதியினை எழுதி கொடுத்துள்ளார்.  சுமார் 1000க்கும் மேற்பட்ட வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை வானொலி, தொலைக்காட்சி, ஆலயங்களில் நடத்தி மக்களிடையே வரவேற்பை பெற்றார்.

கல்கி எழுதிய காந்தியின் சுய சரிதையை முதன் முதலாக வில்லுப் பாட்டாக பாடியவர். இவர் காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை என ஏராளமான வில்லுப்பாட்டுகளை பாடியுள்ளார். கவிஞர் என எல்லோராலும் போற்றப்பட்ட சுப்பு ஆறுமுகம் கலைமாமணி என்ற பட்டத்தையும், மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதையும் பெற்றார். கடந்த 2021ம் ஆண்டில் மோடி அரசின் தலைமையிலான மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதையும் வழங்கியது.  இவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும், கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *