விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்களிடையே பிரபலமான ஒரு தொடராகும். இந்த தொடர் அண்ணன் தம்பிகளை மையமாக வைத்து கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் கலந்த தொடராகும். இந்த தொடருக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த தொடர் தற்போது 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகும் ஒரு தொடராகும்.
இந்த தொடரில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் அதில் முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு மக்களிடையே வரவேற்பு அதிகம். இதில் முதலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் வி ஜே சித்ரா நடித்து வந்தார். அதில் கதிர் மற்றும் முல்லை இவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் அனைவரையும் ஈர்த்து இந்த நாடகத்தை பார்க்க மக்களை தூண்டியது. இவர் இறந்த பிறகு அந்த கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி என்பவர் நடித்துக் கொண்டிருந்தார்.
ஆரம்பத்தில் இவர் இந்த கேரக்டருக்கு கொஞ்சம் செட் ஆகாதது போல் இருந்தது. அதன் பிறகு அவரின் நடிப்பு மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்தது. மக்களுக்கு அவரை பிடித்து நாடகத்தை விரும்பும் நேரத்தில் அவரும் நாடகத்தை விட்டு விலகுவதாக அறிவித்தார். இந்த செய்தி மக்களிடையே சற்று அ தி ர் ச் சியை ஏற்படுத்தியது. நாடகம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இவர் விலகுவது சற்று மன வ ருத் த ம் தான்.
இவர் வி ல கும் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் ரசிகர்களின் அடுத்த கேள்வி அடுத்த முல்லை யார் என்பது தான். இத்தனை நாட்களாக மக்களிடையே இருந்த இந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. 14.10.2022 இந்த தேதிதான் காவியா அறிவுமணி நாடகத்தில் நடிக்கும் கடைசி நாளாகும்.
அதாவது சிப்பிக்குள் முத்து என்கிற தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் லாவண்யா தான் இனி அடுத்த முல்லையாக நடிக்கப் போகிறார் என்கிற செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது சிப்பிக்குள் முத்து சீரியல் கடந்த வாரம் நிறைவடைந்துள்ள நிலையில் அதில் நடித்த நடிகை லாவண்யா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார்..