விஜய் டிவியில் மக்கள் அதிகம் பார்க்கும் ஒரு ஷோவாய் என்றும் இருக்கும் சூப்பர் சிங்கர் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் தான் சிங்கர் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பாடகரான உதித் நாராயணன் போல் படுவதை தான் அனைவரும் அதிகமாக ரசிப்பார்கள். இவருக்கு கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் தான் ஜெஸி என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது இவர் நல்ல செய்தி ஒன்றை கூறியுள்ளார் அஜய் கிருஷ்ணா.அது என்னவென்றால், தனது மனைவி ஜெஸி தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். மகிழ்ச்சியான சிங்கர் அஜய் கிருஷ்ணா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விஷயத்தை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.