தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழில் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் பல வெற்றித் திரைப்படங்ளை கொடுத்தவர். சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை வி வா கர த் து செய்வதாக அறிவித்திருந்தார். சில தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் அதிகமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பொதுவாகவே நடிகர் தனுஷ் திரைப்படங்களில் அறிமுகமாகும் இளம் கதாநாயகிகளை தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பதில் அதிக அளவில் ஆர்வர் காட்டி வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் அறிமுகமான பிரியங்கா மோகனை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் பிரியங்கா மோகன். இதைத் தொடர்ந்து தற்போது விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் அடுத்த நடிகையையும் கமிட் செய்துள்ளாராம். அவர் வேறு யாருமில்லை தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழும் நடிகை ராஷ்மிகா மந்தனா தான்.
இவர் தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரத்திலிருந்து தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இவரையும் நீங்கள் விட்டு வைக்க வி ல்லையா என கூறி வருகின்றனர்.