சொந்த மண்ணில் பிரம்மாண்டமாக பங்களா கட்டிய செந்தில் கணேஷ் ராஜலட்சுமி ஜோடி…!! இது என்ன பங்களாவா இ ல் லை திருமண மண்டபமா என வீடியோவைப் பார்த்து வி யந்து போன ரசிகர்கள்..!!

General News videos

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோடிகள் தான் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஜோடி. இவர்கள் இருவரும் இணைந்து கிராமப்புற பாடல்களை பட்டி தொட்டியிலிருந்து உலகம் முழுவதும் பரப்பும் வகையில் பாடல்களை பாடி வந்தனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்ட களத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது பாடல்களை பாடியதன் மூலம் மக்களால் அறியப்பட்டார்.

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பாடல்களை படி அசத்தினர். அதன் பிறகு இன்னும் அதிகமாக மக்களால் தெரிந்து கொள்ளப்பட்டு அவர்களுக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவாக்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டது. சாதாரணமாக இருந்த இவர்கள் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட பிறகு இவர்களா இப்படி இருக்கிறார்கள் என்று வியக்கும் அளவுக்கு இவர்களின் வாழ்க்கை மாறியது.

இவர்கள் முன்னேறியது மட்டுமல்லாமல் நாட்டுப்புற பாடல்கள் பாடும் மற்ற கலைஞர்களின் வாழ்க்கை தரத்தை பற்றியும், அவர்கள் படும் து யர ங்கள் பற்றியும் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வந்தனர். அதன் பிறகு தான் மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் இவ்வளவு து ய ரங்கள் இருக்கிறதா என்றே புரிந்தது.  அதோடு அவர்களால் முடிந்த உதவிகளையும் அவர்களுக்கு செய்து வந்தனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு படிப்படியாக முன்னேறி முதல் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போதே அவர்களுக்கு பட வாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்க ஆரம்பித்தன. வெற்றி பெற்ற பிறகு செந்தில் கணேஷ் காப்பான், சார்லி சாப்லின் 2, சூரரைப் போற்று போன்ற படங்களில் பாடல்களை பாடியிருந்தார். அதே போல் ராஜலக்ஷ்மியும் புஷ்பா படத்தில் வாயா சாமி என்ற பாடலைப் பாடியதன் மூலம் மிகப் பெரிய இடத்தைப் பிடித்தார்.

இது மட்டுமில்லாமல் கோவில் நிகழ்ச்சிகள், கச்சேரிகள் போன்ற மேடை நிகழ்ச்சிகளில் பாடி வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் தங்களது சொந்த ஊரான புதுக்கோட்டையில் புதிதாக வீடு ஒன்றை காட்டியுள்ளனர். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா கூட சமீபத்தில் நடைபெற்றது. தற்போது அந்த வீட்டின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இது வீடா இல்லை திருமண மண்டபமா என்று பலரும் கேட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக உள்ளது அவர்களின் புதிய வீடு.

tamilglitz.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *