தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் சந்தானம். காமெடி மட்டுமின்றி ஹீரோவாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்புக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறார்கள். இவர் ஆரம்பத்தில் விஜய்டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் இருந்து தான் இந்த அளவு முன்னேறியிருக்கிறார். இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெரிய இடத்தை பிடித்திருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குலு குலு படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக அவர் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் சந்தானம் கடலூர் செல்லும் வழியில் புதுச்சேரி சென்றுள்ளார். அப்பொழுது அங்கு கிழக்கு கடற்கரை சாலை கருவடிக்குப்பம் அருகில் உள்ள ஸ்ரீ மத் குறு சித்தானந்த சாமி கோவிலுக்கு தன மகனுடன் தரிசனம் செய்வதற்காக சென்றிருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த பு கைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சந்தானத்தின் மகனா இது? என்ன இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டார் என ஆ ச்சர்யத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…