பொதுவாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் மக்களிடையே குறைந்த நாட்களிலேயே நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மக்களை வெகுவாகவே கவர்ந்து விடுகிறது. அப்படி ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கோபிநாத். இவர் இந்த நிகழ்ச்சியை 15 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர் இதற்கு முன் மக்கள் யார் பக்கம் மற்றும் சிகரம் தொட்ட மனிதர்கள் போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகுதான் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். தொகுத்து வழங்க ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை சிறப்பாக நடத்தி வருகிறார். இவை திரை துறைக்கு வருவதற்கு முன்னால் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். இவர் பல கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவருக்கும் பல நல்ல கருத்துகளையும் வழங்கி வருகிறார்.
அது மட்டுமில்லாமல் சில படங்களிலும் நடித்துள்ளார். வாமனன், நிமிர்ந்து நில், தோனி, திருநாள் போன்ற படங்களில் நடித்துள்ளார். நீயா நானா நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். கோபிநாத்துக்கு துர்கா என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கோபிநாத்தின் தாய் மற்றும் தந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. கோபிநாத்தின் தந்தை கடந்த 2020ம் ஆண்டு காலமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவர்களின் புகைப்படம்…
Cineulagam.com