2007ம் ஆண்டில் தெலுங்கு சினிமா மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. அதன்பிறகு தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சூர்யா, சிம்பு, விஜய், கார்த்தி, ஜெயம் ரவி, விஷால், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் போன்ற முன்னணி நடிகர்கள் பலருடன் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, அரண்மனை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், போகன் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் வைத்துள்ளார்.
சிறிது நாட்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் தனது உடல் எடையை குறைத்து தற்போது பல படங்களில் கமிட்டாகி உள்ளார். இந்நிலையில் தென்னிந்திய அரசியல் பிரமுகர் ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால் அப்போது அந்த தகவலை அவர் மறுத்தார்.
ஆனால் தற்போது வரும் டிசம்பர் மாதம் அவருக்கு மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 450 வருடங்கள் பழமையான ஜெய்ப்பூரில் உள்ள Mundota Fort and Palace ல் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தடபுடலாக வேலைகள் நடைபெற்று வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர்.