4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் சூப்பர் ஸ்டாரின் ரீல் தங்கை…!! எந்த நடிகருடன்…? இயக்குனர் யார் தெரியுமா…?

Cinema News Image News

தமிழ் சினிமாவில் 1989ம் ஆண்டு வெளியான புதுவசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சித்தாரா. அந்த படத்திற்கு பிறகு புது வசந்தம், புது புது ராகங்கள், புரியாத புதிர், ஒரு வீடு இரு வாசல், பாட்டொன்று கேட்டேன் உட்பட பல படங்களில் நடித்தார். கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்த இவர் தனக்கென்று ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார். அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பு குறைந்து விட்டது. மார்க்கெட் இல்லாத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகி விட்டார்.

வெள்ளித்திரையை விட்டு விலகி இவர் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். கங்கா யமுனா சரஸ்வதி, ஆர்த்தி, கவரி மான்கள், பராசக்தி உள்பட பல சீரியல்களில் நடித்தார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்தார். அதோடு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் தற்போது விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் ஹிட்லிஸ்ட் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இயக்குனர்கள் சூர்ய கதிர் மற்றும் கார்த்திகேயன் இணைந்து இயக்கம் இந்தப் படத்தில் சரத்குமார், கே.எஸ்.ரவிக்குமார், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎப் புகழ் கருடா ராமச்சந்திரா, மைம் கோபி மற்றும் அனுபமா குமார் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கின்றனர்.

விக்ரமன் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் ஆகிய இவர்களின் ஆஸ்தான நடிகையான சித்தாரா  தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விக்ரமன் மகன் அறிமுகமாகும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *