ரவீந்தர் சந்திரசேகரன் ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார். அவருக்கு லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனம் உள்ளது. 2021 ஆம் ஆண்டில், சுப்பு இயக்கிய சுட்ட கதை திரைப்படத்தை அவர் தயாரித்தார். நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டதால் அவர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
ரவீந்தர் சந்திரசேகரன் தற்போது திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பு சென்னையில்நடைபெற்றது. ரவீந்திரன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, அதில் அவர் மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லவாங்க… ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையை கிடச்சா என்று கூறியுள்ளர்.
இந்த ஜோடி பல பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டிகளையும் கொடுத்து வந்தார்கள். அந்த வகையில் பிரபலமான யூடூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வந்தார்கள்.அதுமட்டுமல்லாமல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வந்தால் மகாலட்சுமியே என்ற நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு தங்களது வாழ்க்கையை பற்றி பகிந்து கொண்டார்கள்.