மெகா ஸ்டாருக்கு ஜோடியாகும் நடிகை ஜோதிகா...!! யார் அந்த நடிகர் தெரியுமா...? வெளியான படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்...!!

மெகா ஸ்டாருக்கு ஜோடியாகும் நடிகை ஜோதிகா…!! யார் அந்த நடிகர் தெரியுமா…? வெளியான படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்…!!

Cinema News Image News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அந்த படத்தில் சிறிய வேடத்தில் மட்டும் நடித்திருப்பார். அதன் பிறகு சூர்யாவுடன் இணைந்து பூவெல்லாம்  கேட்டுப்பார் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். ரஜினி தொடங்கி அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

இவர் சூர்யாவுடன் இணைந்து அதிகமான படங்கள் நடித்துள்ளார். அவருடன் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடிக்கும் போது நண்பர்களாக பழக்க ஆரம்பித்து அந்த நட்பு பின்னாளில் அவருடன் நடிக்கும் போது அவருடன் காதல் ஏற்பட்டது. அதன் பிறகு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு சில காலம் திரைப்படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்த ஜோதிகா அதன் பிறகு 2005ம் ஆண்டு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் உடன்பிறப்பே திரைப்படமாகும்.

இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டியுடன் ஜோதிகா இணைந்து நடிக்கப் போவதாக முன்னரே தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் காதல் என்கிற பெயரில் அப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்போர்வமாக வெளியாகியுள்ளது. போஸ்ட்ரைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *