தொலைக்காட்சி என்ற ஒன்று ஆரம்பித்த காலத்தில் இருந்தே தொடர்கள் ஆரம்பமாகி விட்டது. அன்று முதல் இன்று வரை தொடர்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் தொடர்களுக்கு அடித்தளம் அமைத்தது சன் டிவி தான். முதலில் சீரியல்கள் சன்டிவியில் தான் ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து புதிது புதிதாக சேனல்களும், தொடர்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த தொடர்களுக்கு அதிகப்படியான மக்கள் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில் சன்டிவியில் ராதிகா இயக்கி அவர் நடித்த வாணி ராணி தொடர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த தொடரில் ராதிகாஇரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இதில் ஒரு ராதிகாவின் மகளாக தேனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நேஹா.
இவர் கேரள மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டவர். இவர் பல திரைப்படங்களிலும் பல தொடர்களிலும் நடித்திருக்கிறார். சிறிய வயதிலேயே இவரின் மிகச் சிறப்பான நடிப்பால் மக்கள் மனதைக் கொள்ளை கொண்டார். இன்றும் பல படங்களில் நடித்து வருகிறார். 19 வயதான நேஹா பைரவி என்ற தொடரின் மூலம் தான் தமிழில் அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து பிள்ளை நிலா, வாணி ராணி போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
வெள்ளித்திரையை பொறுத்தவரை ஜாக்சன்துரை போன்ற படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நேஹா தற்போது வளர்ந்து விட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்து வருகிறார். 19 வயதாகிவிட்ட நேஹாவுக்கு தற்போது தங்கை பிறந்துள்ளாராம். இந்த விஷயத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த பலர் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இன்னும் சிலர் பெண்ணுக்கு கல்யாணம் ஆகும் வயதில் இன்னொரு குழந்தையா எனவும் கமெண்ட் செய்கின்றனர். இந்த மாதிரியான விமர்சனங்களை பொருட்படுத்தாத நேஹா இப்படி குப்பைத்தனமாக கமெண்ட் செய்து உங்கள் பொன்னான நேரத்தை வீ ணா க்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.
என்ன இருந்தாலும் இவருக்கு திருமணம் ஆகியிருந்தால் இவர் அம்மாவாகி இருப்பார். ஆனால் இப்படி ஒரு நிலையில் இவருடைய அம்மா குழந்தை பெற்றெடுத்திருப்பது சிலரிடம் ச ர் ச் சையை உண்டாகியுள்ளது.
Copyright Jobsbazzar.com