26 வருடத்திற்கு முன்பு ரஜினியுடன் நடித்த அப்பத்தா..!! இந்த திரைப்படம் தெரியுமா.? அட, இப்படி ஒரு ரோலா என்ற அ தி ர்ச் சியான ரசிகர்கள்..!! இணையத்தில் வை ர லா கும் புகைப்படம்...!!

26 வருடத்திற்கு முன்பு ரஜினியுடன் நடித்த அப்பத்தா..!! இந்த திரைப்படம் தெரியுமா.? அட, இப்படி ஒரு ரோலா என்ற அ தி ர்ச் சியான ரசிகர்கள்..!! இணையத்தில் வை ர லா கும் புகைப்படம்…!!

Cinema News Image News

பொதுவாக ரஜினி படம் என்றாலே ரசிகர்கள் அனைவருக்கும் ஒரே குஷிதான். ஆரம்ப காலம் முதல் 70 வயதானாலும் இன்று வரை அவருக்குன்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. அவரை கொண்டாடாதவர்களே இல்லை எனலாம். ரஜினியின் படம் வெளிவருகிறது என்றாலே மக்களுக்கு தனி சந்தோசம் தான்.  கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியான ரஜினியின் திரைப்படம் அண்ணாத்த.  இந்தத் திரைப்படம்  கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஓரளவு நல்ல வசூலை பெற்றது.

இந்தத் திரைப்படத்தில் பெரியாத்தாவாக நடித்தவர் குலப்புலி லீலா. இவர் மலையாள திரையுலகில் புகழ் பெற்ற நடிகையாவார். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். அதோடு சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும் விஷால் நடிப்பில் வெளிவந்த மருது என்ற படத்திலும் நடித்து புகழ் பெற்றவர்.

அந்தப் படத்தைத் தொடர்ந்து ஐரா மற்றும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படங்களில் நடித்த அவருக்கு அண்ணாத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இந்த நிலையில் அந்தப்படத்தில் நடித்த குலப்புலி லீலா இதற்கு முன்பே ரஜினி படத்தில் நடித்துள்ளார்.

அதாவது 1995ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கி ரஜினிகாந்த், சரத் பாபு, மீனா செந்தில் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து மிகப் பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் முத்து. இந்த திரைப்படத்தில் ஒரு சீனில் ரஜினியை மரத்தின் மேல் கட்டி வைத்திருப்பார்கள். அந்த சீனில் மரத்தடியில் இருந் து பல பேர் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களில் ஒருவராக இவர் கீழே நின்று கொண்டிருப்பார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது மட்டுமின்றி இவருக்கு ரஜினியை விட மூன்று வயது குறைவு. இருந்தாலும் கூட அண்ணாத்த படத்தில் பெரியாத்தாவாக நடித்திருப்பார். வயது குறைவாக இருந்தாலும் எந்த விதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *