இது அங்கவை.. என்னது இத அங்க வெக்கவா?? யோவ் இது அழகான தமிழ் பெயருயா!! ” ஆம் உண்மையிலேயே அங்கவை, சங்கவை இலக்கியத்தில் வரும் வார்த்தை இது. அது யாருக்கு தெரிந்திருக்க போகிறது. அந்த இளைக்கியங்களை படித்தவர்களை தவிர. ஆனால் இலக்கியத்தில் கூட இந்த பாத்திரங்கள் அவ்வளவு பேமஸ் இல்லை.
ஆனால் இந்த சிவாஜி திரைப்பட கேரக்டராக வரும் அங்கவையும், சங்கவையும் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ். ஒரே ஒரு காட்சிதான் உலக பேமஸ். கடந்த 2007ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகந்த் நடிப்பில் இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற படம் தான் சிவாஜி. பிளாக் மணி ஒழிப்பை மையக்கருவாகக் கொண்ட இந்தப்படத்தில் ஒரு காட்சிக்காக சாலமன் பாப்பையாவும் நடித்திருப்பார்.
அந்த ஒரு நகைச்சுவை காட்சியில் தான், அங்கவை மற்றும் சங்கவை என்ற பெண்களும் வருவார்கள்.இந்த படத்தில் பட்டிமன்ற ராஜாவின் எதிர்வீட்டுக்காரராக வரும் பாப்பையாவுக்கு இரண்டு மகள்கள். அதில் ஒருவரது பெயர் அங்கவை. மற்றொரு பெண்ணின் பெயர் சங்கவை.இந்த காட்சியினை யாரூக்கு தான் விளக்க வேண்டும், அந்த அவசியம் யாருக்கும் இல்லை தன்.
இதில் பாப்பையா வாங்க பழகலாம் என அழைப்பதும் ரொம்ப பேமஸ். என்கிட்டே ரெண்டு பொண்ணிருக்கு என்பதும் ரஜினி வேண்டாங்கைய்யா என மறுப்பதும் அவர்கள் கருப்பு என்பதால் தன் போன்றதாக இந்த காட்சியினை அமைத்திருப்பார்கள். இது ஒரு பக்கம் பெரிய ச.ர்சையாகவும் கிளம்பியது. இதோ அந்த அங்கவை சங்கவையின் நிஜ புகைப்படம்.